4 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை:போலீசார் விசாரணை

Author: Udhayakumar Raman
16 October 2021, 5:58 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 4 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி அருகே உள்ள வேளாங்கண்ணிபுரத்தைச் சேர்ந்தவர் பிரின்சி. இவருக்கும் தோமையார் புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கஸ்பார் என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தீமோஸ்லிவி என்ற நான்கு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை தோமையார்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து தனது குழந்தையுடன் செட்டியபட்டிக்கு சென்ற பிரின்ஸ்சி அங்கு செல்லவில்லை. இதையடுத்து அவரது கணவர் ஸ்டீபன் கஸ்பர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், இன்று தோமையார்புரம் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் பிரின்ஸியும், அவரது நான்கு வயது ஆண் குழந்தை தீமோஸ்லிவி இருவரும் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 196

0

0