வாழை மரத்தை வெட்டுவது போல ஊருக்குள் புகுந்து சிறுவன் உட்பட 5 பேரை வெட்டிய மர்மகும்பல் : சாதிய மோதலா?!!
மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் இன்று இரவு அந்தப் பகுதியை சேர்ந்த கணபதி (28), விஜய் குட்டி (25), அஜித் (24) உட்பட இன்னும் நான்கு ஐந்து பேர் ஊருக்குள் உள்ள நாடக மேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த இருவர் அஜித் என்பவர் இடம் கண்ணா எங்கிருக்கிறான் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தெரியாது என்று கூறவே திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை வெட்டத் தொடங்கியுள்ளார், இதனால் பதட்டமடைந்த ஒரு சிலர் தப்பியோடவே அஜித், விஜய் குட்டி, கணபதி என மூன்று பேரை வெட்டியதில் அவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி(48) என்னும் கூலி தொழிலாளி தனது பேரன் சார்வின்(6) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அந்த வழியாக வந்து கொண்டிருந்த போது கூச்சல் சத்தம் கேட்டு நாடக மேடை அருகே சென்று பார்க்க முற்பட்டபோது அந்த இருவர் திடீரென பெரியசாமி மற்றும் அவரது பேரன் ஆறு வயது சிறுவன் சர்வினையும் வெட்டியுள்ளனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவும் சுதாரித்துக் கொண்ட அந்த இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வந்த இருவர் யார், அவர்கள் விசாரித்த கண்ணன் என்பவர் யார், ஜாதி பிரச்சனை காரணமா, அவர்களுக்குள் எதுவும் முன் பகையா, இல்லை வந்தவர்கள் எதுவும் போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் ஊருக்குள் புகுந்து முன் பின் தெரியாத ஐந்து பேரை திடீரென இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
This website uses cookies.