கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர் திடீர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி!!!
தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.
இவருடைய மகள் குருவம்மாள் (வயது 32). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கொரோனா தொற்று காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக நர்சாக பணியில் சேர்ந்து வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குருவம்மாளை எலி கடித்தது. இதனால் அலர்ஜி ஏற்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
ஆனாலும் அவருக்கு சரிவர குணமாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்தும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து அலர்ஜி பாதிப்பு இருந்தது.
வேதனையடைந்த குருவம்மாள் கடந்த 18-ந் தேதி வீட்டில் திடீரென்று கத்தியால் தனது கழுத்து மற்றும் கைகளில் அறுத்துக் கொண்டார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தவாறு உயிருக்கு போராடினார்.
உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குருவம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குருவம்மாளின் தாயார் வசந்தி (53) அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.