மேட்டுப்பாளையத்தில் சாலையோரம் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் மீது கட்டுப்பாட்டை இழந்த பிக் அப் வாகனம் மோதிய பதைபதைக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் கணபதி நகர் பகுதியைச்சேர்ந்தவர் முகமது அலி(38). லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது (வயது 11) மற்றும் ( 7) வயதான இருவர் மற்றும் (14) வயதான அவரது அண்ணன் மகன் உள்ளிட்டோரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் – காரமடை சாலையில் உள்ள மீனாட்சி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை நோக்கி மகேந்திரா பிக் அப் வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்துள்ளது. பிக் அப் வாகனத்தை மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரது மகன் முகமது சலீம்(31) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் காரமடை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பிக் அப் வாகனம் போலீசாரின் சிக்னல் போஸ்ட்டை உடைத்துக்கொண்டு சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பின்னர் அருகில் உள்ள சுவற்றில் மோதி நின்றுள்ளது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்து நின்று கொண்டிருந்த 4 பேரில் முகமது அலி மற்றும் சிறுமி ககும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று லேசான காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விபத்தினை ஏற்படுத்திய முகமது சலீமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த பதைபதைக்கும் விபத்து குறித்த வீடியோ சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் பொருத்தப்பட்டிருந்த முன்புற கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.