Categories: தமிழகம்

பாஜக அலுவலகத்தில் இருந்து துரத்தி விரட்டப்பட்ட நபர் திடீர் உயிரிழப்பு : பரபரப்பு சிசிடிவி காட்சி!!!

கோவையில் பாஜக அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஓசூர் ரோட்டில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று மாலை அலுவலக உதவியாளர் விஜய் என்பவர் பணியில் இருந்தார்.

அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அரையின் கதவை உட்பக்கமாக பூட்ட முயற்சி செய்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக உதவியாளர் விஜய் எழுந்து வந்து அந்த மர்ம நபரை வெளியே செல்லுமாறு கீழே தள்ளிவிட்டார்.

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விஜய் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் பாஜக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்.

நேற்று மாலை 5:47 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் உள்ளே நுழைந்தார். பின்னர் நான் தனியாக இருப்பதை அறிந்த அவர் கதவினை உள்பக்கமாக தாழிட முயற்சி செய்தார்.

நான் அவரை விரட்டி விட்டேன். எனக்கு இந்த நபர் மீது மிகவும் சந்தேகமாக உள்ளது. இவர் யார்? எதற்காக உள்ளே நுழைந்தார்? என தீர விசாரிக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

அதன் பிறகு ரேஸ்கோர்ஸ் போலீசார் சி.எஸ். ஆர். பதிவு செய்தனர். மேலும் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் நடைபெற்ற கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் பாஜக அலுவலகத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அவிநாசி ரோட்டில் மர்ம நபர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த நபர்தான் பாஜக அலுவலகத்துக்குள் புகுந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் விபத்து நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர் எதிர்பாராமல் நடைபெற்ற விபத்தில் பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எதற்காக பாஜக அலுவலகத்துக்குள் நுழைந்தார், சுமார் 45 வயது மதிக்கத்தக்க அவர் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…

14 minutes ago

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

16 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

16 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

17 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

18 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

18 hours ago

This website uses cookies.