42 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி கைது : காஞ்சிபுரத்தில் பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2022, 2:31 pm
Rowdy Padappai Guna Wife Arrest - Updatenews360
Quick Share

பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் கைது செய்யப்பட்டுள்ளதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது , உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் எட்டு கொலை வழக்குகள் அடக்கமாகும். பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து மதுரமங்கலத்தைச் சேர்ந்த அன்னப்பன் என்பவரின் மகள் ரூபாவதி. இவர் சுங்குசார் சத்திரம் அருகே உள்ள கீரநல்லூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.

அன்னப்பனுக்கு சொந்தமான காலிமனை பட்டாவை படப்பை குணா, சென்னை ஆயுதப் பிரிவு காவல் துறையில் பணிபுரிந்து வரும், அப்பு என்கிற சதீஷ்குமார், நாகராஜ், சதீஷ் மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 நபர்கள் ரூபாவதியை மிரட்டி வாங்கி சென்றதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி படப்பை குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா தற்போது வரை தொடர்ச்சியாக தலைமறைவாகி இருக்கிறார்.மேலும் தலைமறைவாக இருக்கும் சமயத்திலும் பல்வேறு தொழிற்சாலைகளை மிரட்டுவது, தொடர்ச்சியாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது என தொடர்ச்சியாக ரவுடியிசம் செய்து வந்தார்

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானது. இதனால் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எடிஎஸ்பியாக உள்ள
வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த சில வாரமாக மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளை கைது செய்து, பல்வேறு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் படப்பை குணாவுக்கு உடந்தையாக இருந்த காவலர் வெங்கடேசன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார். அதேபோல் பிரபல ரவுடி சிவா என்பவரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார்கள்.

தொடர்ச்சியாக படப்பை குணா தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் படைப்பை குணாவின் மனைவியும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர் எல்லம்மாள் உள்ளிட்ட 6 பேர்களை இன்று அதிகாலை கூடுதல் எஸ்பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

காஞ்சிபுரம் சரகத்தில் செங்கல்பட்டில் 7 போ், திருவள்ளூரில் 18 போ், காஞ்சிபுரத்தில் 9 போ் என மொத்தம் 34 போ் முதன்மைக் குற்றவாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவா்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கபட்டு தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவா்களைத் தவிர திருவள்ளூரில் 720, செங்கல்பட்டில் 582, காஞ்சிபுரத்தில் 592 போ் உட்பட மொத்தம் 1,894 போ் அடங்கிய பட்டியலையும் போலீசார் தயார் செய்திருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் சரகத்தில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ரெளடிகளைப் பிடித்து, குற்றங்களை முழுமையாகத் தடுக்க 36 போ் கொண்ட சிறப்பு தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளார்கள். தலைமறைவாகி உள்ள படப்பை குணா விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் படப்பை குணாவுக்கு 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குணாவிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு உடந்தையாக செயல்பட்ட விபரமும் லிஸ்ட் எடுக்கப்பட்டு ஏடிஎஸ்பி வெள்ளத்துரை வசம் உள்ளது.

திமுக கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளரும், திருமங்கலம் ஊராட்சியின் துணைத் தலைவருமான நரேஷ் படப்பை குணாவுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் தற்போது தலைமறைவாக உள்ளார். எனவே நரேஷின் அம்மாவை காவல்துறையினர் பிடித்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Views: - 635

0

0