சென்னை: ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று விலை அதிகரித்து ரூ.4,877 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சமீப காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. ஏதோ ஒரு நாள் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது.
இதனால் நகை வாங்கும் பெரும் சிரமத்தில் உள்ளனர். கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ச்சியான விலையேற்றம் நீடிக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.27 அதிகரித்து ரூ.4,877 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,850 ரூபாயாக இருந்தது.
அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 216 ரூபாய் உயர்ந்து 39,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 66.80 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருவது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
………………….
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.