குளியலறையில் இருந்து கால்.. சிக்கிய பேராசிரியர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

Author: Hariharasudhan
13 November 2024, 7:45 pm

கோவையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பேராசியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். முதுகலை பட்டதாரியான இவர், கோவையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்து உள்ளார். அப்போது, தனது அசல் கல்விச் சான்றிதழ்களை அந்த நிறுவனத்தில் கொடுத்து உள்ளார்.

பின்னர், அந்த நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதை நிறுத்திய அப்பெண், மேற்படிப்பை தொடர்ந்து உள்ளார். இதற்கு அசல் சான்றிதழ்கள் தேவைப்பட்டு உள்ளது. ஆனால், தான் சேர்ந்த நிறுவனத்தில் சான்றிதழ்களைக் கொடுக்காததால், கோவையைச் சேர்ந்த பேராசிரியர் சிவப்பிரகாசம் என்பவரின் உதவியை நாடி உள்ளார்.

இந்த நிலையில், அசல் சான்றிதழ்களைத் தான் வாங்கி வைத்து உள்ளதாகவும், வீட்டில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் சிவப்பிரகாசம் போனில் அப்பெண்ணிடம் கூறி உள்ளார். இதனையடுத்து, சிவப்பிரகாசம் வீட்டிற்கு இளம்பெண் சென்று உள்ளார். அங்கு சிறுது நேரம் பேசிய சிவப்பிரகாசம், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று உள்ளார்.

ARREST HANDS

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், உடனடியாக குளியலறைக்குள் சென்று உள்ளார். பின்னர், உள்ளே இருந்தவாறே தனது தோழிக்கு மொபைலில் அழைத்து நடந்தவற்றைக் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது தோழி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து உள்ளார்.

இதையும் படிங்க: 2வது பிரசவத்திற்குச் சென்ற இருவர் பலி.. பதறிய பறிகொடுத்த சொந்தங்கள்.. தர்மபுரியில் நடந்தது என்ன?

இதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி போலீசார், இளம்பெண்ணை குளியலறையில் இருந்து மீட்டு, பேராசியரியரையும் அழைத்துக் கொண்டு கோவை மேற்கு அனைத்து காவல் நிலையத்துக்குச் சென்றனர். பின்னர், இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 233

    0

    0