தமிழகத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…!!

19 October 2020, 9:38 am
1southern railway - updatenews360
Quick Share

பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக மேலும் சிறப்பு ரயில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பண்டிகை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து பூரி, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் ஆகிய இடங்களுக்கு, மறு மார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஐதராபாத்-தாம்பரம், ஜாம்நகர்-நெல்லை, புவனேஸ்வர்-ராமேஸ்வரம், மதுரை-பிகானேர் ஆகிய இடங்களுக்கு நவம்பர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

Views: - 16

0

0