‘என்னால எதுலயும் ஜெயிக்க முடியல’ : இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த மாணவர் விபரீத முடிவு.. தமிழகத்தில் தொடரும் சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 5:10 pm
Neet Student Suicide - Updatenews360
Quick Share

சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரதாப் (வயது 42). இவரது இளையமகன் தனுஷ் (வயது 18). கடந்த 2020 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த பின்னர் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை.

இதனால் மன உறைச்சலில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தனுஷ் தன்னை தயார்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தனுஷின் தந்தையும் தாயும் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தனுஷ், இந்த முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என அச்சம் கொண்டு பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வழக்கம் போல பணியை முடித்து விட்டு வந்த அவரது தாய், கதவை திறந்து பார்க்கும் போது கமன் தனுஷ் வீட்டு மேற்கூரையில் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடலை பார்த்து தனுஷின் தாய் கதற, சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தனுஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனுஷ் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனுஷின் செல்போனை போலீசார் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில், இரண்டாவது முறையும் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 392

0

0