இளைஞரின் மரணத்தில் திடீர் திருப்பம்.. அடித்துக் கொலை என உறவினர்கள் மறியலால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
19 செப்டம்பர் 2024, 4:43 மணி
Youth Murder
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் கல்லுப்பட்டி வெள்ளைச்சாமி – மாரியம்மாள் ஆகியோரின் மகன் பிரபாகரன் (27) மற்றும் 2 மகள்கள உள்ளனர். பிரபாகரன் கோவிலூர் பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

பிரபாகரன் நண்பன் ராஜகாப்பட்டியை சார்ந்த குமரேசன் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் குமரேசன் நேற்று பிரபாகரனை வீட்டிற்கு சென்று ஆட்டோவில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோ கம்பளிபட்டி பகுதியில் எந்த ஒரு வாகனங்கள் மீதும் மோதாமல் கீழே விழுந்து விபத்துக்குள் ஆனதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: உதயநிதி பதவியேற்புக்காக முகூர்த்த நாளை பார்த்துள்ளார்கள் பகுத்தறிவாளர்கள்.. ஒரே போடாக போட்ட தமிழிசை!!

இதில் பிரபாகரன் பலத்த காயமடைந்தார். உடனடியாக ஆக்கம் பக்கத்தினர் பிரபாகரனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதில் பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் தலைமுறைவாகியுள்ளார்.

மேலும் இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை அழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

youth Murder

இந்த நிலையில் ஆட்டோ குமரேசனை கைது செய்யும் வரையில் பிரபாகரனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியே உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அரை மணி நேரத்திற்கு மேலே திண்டுக்கல் அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

youth Murder

பின்பு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றுள்ளனர்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 195

    0

    0