வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு : செய்வதறியாது திகைத்த அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2021, 1:11 pm
Tirupur Collector - Updatenews360
Quick Share

திருப்பூர் : அதிகாரிகள் எதிர்பார்க்காத நிலையில் திடீரென உழவர்சந்தை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தென்னம்பாளையம் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த மாவட்ட ஆட்சியர் வினீத் திடீரென அதிகாரிகள் எதிர்பார்க்காத சூழலில் உழவர்சந்தை அலுவலகத்திற்கு சென்றார்.

மாவட்ட ஆட்சியரின் வருகையை எதிர்பார்க்காத அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர் . பின்னர் உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகளை கேட்டறிந்த அவர் சாலையோரங்களில் விற்பவர்களுக்கு எந்தவிதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எந்த முறையில் கடை ஒதுக்கீடு பணிகள் நடைபெறுகிறது , விவசாயிகளுக்கு மட்டும் கடை ஒதுக்கீடு செய்யப் படுகிறதா என்பதெல்லாம் குறித்து கேட்டறிந்து ஆவணங்களையும் சரிபார்த்தார்.

Views: - 374

0

0