12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

24 June 2021, 8:59 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் தேர்வாய் கண்டிகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக  பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள 6 ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த், உதவி காவல் ஆய்வாளர் சிவா ஆகியோர் சுந்தரராஜன் கைதுசெய்து போஸ்கோ சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 188

0

0