சட்டை பாக்கெட்டில் இருந்து அலேக்காக செல்போனை தூக்கிய வாலிபர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 2:39 pm
Cell phone Theft - Updatenews360
Quick Share

விழுப்புரத்தில் நூதன முறையில் செல் போன் திருடிய வீடியோ சமூக வலைதள்ளத்தில் வேகமாக பரவி வருகிறது.

விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பார்த்தசாரதி என்பவர் எம்.ஜி ரோட்டில் உள்ள மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சென்றார்.

அப்போது எலுமிச்சை பழம் வாங்கி கொண்டு இருந்த போது இவர் அருகில் இருந்த ஒரு வாலிபர் சட்டை பையில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை நூதன முறையில் அவன் கொண்டு வந்த கைப்பையில் கையை விட்டு அதன் ஓட்டை வழியாக இலகுவாக பார்த்தசாரதியின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல் போனை திருடி சென்று விட்டார்.

பிறகு சிறுது நேரம் கழித்து சட்டைப் பையில் பார்த்த போது செல்போன் காணாமல் போனது தெரியவரவே அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மேற்குக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன் அடிப்படையில் வழக்குபதிவு செய்து அங்குள்ள கடையில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு செல்போன் திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர். அன்று மட்டுமே 7 செல் போன்கள் திருடு போய் உள்ளது குறிப்பிடத்தக்கது. நூதன முறையில் திருடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 234

0

0