சிறு நீரோடையில் ஹாயாக படுத்திருக்கும் புலி.!! (வீடியோ)

29 August 2020, 10:47 am
Quick Share

பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள சிறு நீரோடையில் புலி ஒன்று ஹாயாக படுத்திருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடுவது வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் பந்திப்பூர் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் ரோந்து சென்றபோது வனப்பகுதியில் உள்ள சிறு நீரோடையில் புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது. இதை கண்ட வனக் காவலர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சிறிது நேரம் படுத்திருந்த புலி எழுந்து நடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.