தெலுங்கானாவில் இருந்து அரிசி ஏற்றி வந்த ரயில் நாகர்கோவில் அருகே தடம் புரண்டது : இருசக்கர வாகனங்கள் சேதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2021, 10:38 am
Train Accident - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தெலுங்கானாவில் இருந்து 2500 டன் அரிசி ஏற்றி வந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. கடைசி பெட்டி தடம் புரண்டதால் தண்டவாளத்தின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி வழங்குவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2500 டன் அரிசியை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது.

பின்னர் அந்த ரயில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பகுதிக்கு கொண்டு செல்லும்போது, பின்னோக்கி சென்ற ரயிலின் கடைசி பெட்டி திடீரென தடம் புரண்டது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் முழுமையாக சேதம் அடைந்தன.

சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் நிலைய வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 790

0

0