சாலையை கடக்க முயன்ற பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2023, 2:16 pm
accident - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள G.தும்மலப்பட்டி செல்லும் பகுதியில் திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலை உள்ளது இச்சாலை பிரிவு பகுதி வழியாக ஜீ தும்மலபட்டி, கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி கணவாய் பட்டி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

அதேபோல் கிராம பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதியில் விளையும் காய்கறி பொருட்கள் மற்றும் கூலி வேலைக்கும் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் வத்தலகுண்டு பகுதியில அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் தங்களது தினந்தோறும் அன்றாட தேவைகளுக்கு வத்தலகுண்டு பகுதிக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஜி தும்மலப்பட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் கிராம பகுதி மக்கள் சாலையை கடப்பதற்கு மாற்றுச்சாலையோ அல்லது மேம்பாலம் அமைக்கப்படவில்லை அதேபோல் மேம்பாலம் அமைக்கப்படாததால் இப்பகுதி மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி தொடர்ந்து விபத்தை சந்தித்து வருகின்றனர்.

பலமுறை இப்பகுதி மக்கள் புகார் அளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்நிலையில் இன்று ஜீமலபட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் என்ற கேஸ் சிலிண்டர் கடையில் பணி செய்யும் ஊழியர் இருசக்கர வாகனத்தில் திரும்பும் பொழுது வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜி பொம்பளப்பட்டி கணவாய் பட்டி கல்லுப்பட்டி கெங்குவார்பட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் செல்லும் முக்கிய சாலையில் மேம்பாலம் அல்லது மாற்றுச்சாலையோ அமைக்கப்படாதால் தொடர்ந்து விபத்தை சந்தித்து வருகின்றனர்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலையும் உடனடியாக தலையிட்டு இப்பகுதி பொதுமக்கள் செல்வதற்கு மாற்று சாலை அல்லது மேம்பாலம் அமைத்து தர வேண்டும் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

Views: - 401

0

0