வீடு கட்டச் சென்ற இடத்தில் பழக்கம்.. பஸ் ஸ்டாண்டில் அரிவாள் வெட்டு.. பெண் கைதானதன் பின்னணி என்ன?

Author: Hariharasudhan
14 November 2024, 5:56 pm

குமரியில் முறை தவறிய உறவில் இருந்த நபரை கொலை செய்ய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்திவிளை புல்லுவிளையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். கட்டிட வேலை செய்து வரும் இவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடப் பணிக்காகச் சென்று உள்ளார். அங்கு அவருடன் பணிபுரிந்த சக தொழிலாளியான கருப்பசாமி என்பவரின் மனைவி பழனியாச்சியுடன் ஈஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து ஈஸ்வரனும், பழனியாச்சியும் தனியாக வீடு எடுத்தும் தங்கி வந்துள்ளனர். இதனிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஈஸ்வரன் தனது சொந்த ஊருக்கே வந்து தாயுடன் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து, பழனியாச்சி தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து உள்ளார் ஈஸ்வரன். இதனால் ஈஸ்வரனை கொலை செய்ய பழனியாச்சி திட்டமிட்டு உள்ளார். இந்தத் திட்டத்தின் படி கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி பேருந்து நிலையத்திற்கு ஈஸ்வரனை வரச் சொல்லியுள்ளார்.

VADASERI

இதன்படி பேருந்து நிலையத்திற்கு வந்த ஈஸ்வரன், அங்கு நின்று கொண்டிருந்த பொழுது திடீரென வந்த இரு இளைஞர்கள், ஈஸ்வரனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனால் கை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டுப்பட்ட ஈஸ்வரன், உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிங்க: விருது வாங்கச் சென்ற சிறுமி.. கேரளாவில் மீட்பு.. குமரியில் திடுக்கிடும் சம்பவம்!

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஈஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன்படி இது குறித்த தகவல் தெரிய வரவே, பழனியாச்சி மற்றும் இரண்டு இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பழனியாச்சியை குமரி தனிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அரிவாளால் வெட்டிய இரண்டு இளைஞர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 190

    0

    0