இலங்கை தமிழர் முகாமில் பெண் பலாத்காரம்; கணவருடைய இரு நண்பர்கள் கைது!

Author: Udhayakumar Raman
28 June 2021, 5:58 pm
Quick Share

தருமபுரி: காரிமங்கலம் அருகே இலங்கை தமிழர் முகாமில், நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் உதயன். இவரது மனைவி சங்கீதா, குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து சங்கீதா தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு சங்கீதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது உதயனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த காண்டிபன் என்பவர் போதையில் சங்கீதா வீட்டு கதவைத் தட்டினார். அப்போது கதவை திறந்த சங்கீதாவை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

காண்டிபன் சங்கீதாவை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து தனது நண்பன் ஆண்ட்ரிஸ் என்பவரிடம் கூறி உள்ளார். இதனை அறிந்த ஆண்ட்ரிஸ் கடந்த 23ஆம் தேதி இரவு சங்கீதா வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த சங்கீதாவை அவரும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். இச்சம்பவம் குறித்து சங்கீதா காரிமங்கலம் காவல்நிலையத்தில், புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் துரைராஜ் வழக்குப்பதிவு செய்து காண்டீபன் மற்றும் அவரது நண்பர் ஆண்ட்ரிஸ் ஆகிய இருவரையும் கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 166

0

0