கையில் சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவி..

8 November 2020, 8:10 am
Quick Share

கோவை:கோவையில் பள்ளி மாணவி ஒருவர் கையில் சிலம்பம் சுற்றியபடி தொடர்ந்து பத்து கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை செய்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி யாஷா .சிறு வயது முதலே கராத்தே மற்றும் சிலம்பம் கற்று வரும் இவர் புதிய உலக சாதனை முயற்சியாக கையில் சிலம்பம் சுற்றியபடி பத்து கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து நோபள் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

சாதனை செய்த மாணவிக்கு நோபள் புக் ஆப் ரெக்கார்ட் தீர்ப்பாளர் தியாகு நாகராஜ் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். சாதனை குறித்து பள்ளி மாணவி யாஷா கூறுகையில் அடுத்த சாதனை முயற்சியாக இதே சாதனையை இருபது கிலோ மீட்டர் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

Views: - 6

0

0