ஆம்பூர் அருகே உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என நினைத்து, வீரியம் மிக்க காட்டு கருணை கிழங்கை வேகவைக்காமல், சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியை சேர்ந்த ரஞ்சினி என்ற பெண்ணுடன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 3 பிள்ளைகளுடன், தார்வழி பகுதியிலேயே வசித்து வரும் நிலையில், மணிகண்டன், டிராக்டர் ஓட்டி வரும் நிலையில், மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தேங்காய் ஏற்றிக்கொண்டிருந்த போது, அங்கு நிலப்பகுதியில் இருந்த வீரியம் மிக்க காட்டு கருணைகிழங்கு வகையான கிழங்கை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைத்து, மணிகண்டன் காட்டு கருணைக்கிழங்கை தனது வீட்டிற்கு கொண்டு சென்று கிழங்கை வேகவைக்கமால் சாப்பிட்ட போது, மணிகண்டனுக்கு முகம் மற்றும் வயிறு வீங்கியுள்ளது.
உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சையிற்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து உமராபாத் காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.