திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது
Author: kavin kumar30 October 2021, 8:58 pm
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்ற இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தை சேர்ந்த கலையரசி என்பவரின் 17 வயது மகள். இவர் 12ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி சேர்க்கைகாக வீட்டில் இருந்த நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் காணவில்லை என சிறுமியின் தாய் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். அதில் சீ.வி பட்டரை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற இளைஞர் வடகரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி காலணி தொழிற்சாலை பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பாண்டியனுக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாண்டியன் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.பின்னர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினர், சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் பாண்டியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0
0