பட்டியலின மக்களுக்கு விரோதியான திமுக : ஆதித்தமிழர் மக்கள் கட்சி கடும் தாக்கு..!

23 May 2020, 3:45 pm
RS bharathi - kalyanasundaram - updatenews360
Quick Share

தமிழகத்தில் வலுவான எதிர்கட்சியாக திமுக நிற்பது எப்படி..? பெரும்பான்மையாக ஆதரவு அளித்த மக்கள் யார்..? என நினைத்து பார்த்துக் கொண்டால், நமது நினைவிற்கு வரும் எண்ணங்களுக்கும், தற்போதை திமுகவின் செயல்பாடுகளுக்கும் துளியும் சம்பந்தமில்லாமல்தான் இருக்கும். காரணம், அப்போது, பட்டியலின மக்களின் பாதுகாலனாக இருப்பவர்கள் நாங்கள்தான் என மார்தட்டிக் கொண்டிருந்த திமுகவினர்தான், தற்போது, அதே சமூக மக்களை இழிவு செய்வதும்… ஏளனம் செய்வதும்….

இதனைத் தட்டிக் கேட்டால் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு நிர்வாகிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும். பட்டியலின மக்கள்தானே… ரெண்டு முறை அவர்களின் இருவரின் வீட்டிற்கு சென்று, திண்ணையில் அமர்ந்து போட்டோ புடித்தால், மீண்டும் வாக்குகளை வாங்கி விடலாம் என்பது தான் ஸ்டாலினின் எண்ணமாக இருக்கிறதோ, என்னமோ..

அப்படியில்லையென்றால், கட்சியின் கூட்டத்தில் உயர்பொறுப்பில் இருக்கும் நீதிபதியின் சமுதாயத்தை இழிவுபடுத்திய ஆர்எஸ் பாரதியை அன்றே கண்டித்திருக்க வேண்டும். இந்த தவறினால்தான் தற்போது, தயாநிதி மாறன், பழனிவேல் தியாகராஜன் என அடுத்தடுத்து சாதி வன்மை பேச்சுக்கள் நீள காரணம் என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்வாரா..?

ஆனால், நடந்ததோ வேறு, பட்டியலின மக்களை விமர்சித்ததால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், தவறிழைத்த ஆர்எஸ் பாரதியின் கைதுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அதேவேளையில், பட்டியலின மக்களை விமர்சித்தால், இதுதான் பரிசு என்பதை உணர்த்திய போலீஸின் கைது நடவடிக்கையை ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ் பாரதியின் கைது குறித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் பேசியதாவது :- பிறரை துன்புறுத்தும் நோக்கில் தொடர்ந்து பேசி வரும் திமுக எம்பி ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறோம். திமுகவின் நிகழ்ச்சியில் பட்டியலின சமுதாய நீதிபதியை இழிவுபடுத்தியதோடு, மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட அரிஜன என்ற வார்த்தையையும் பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

திமுகவினர் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என வலியுறுத்தி வரும் வேளையில், தயாநிதி மாறன் பட்டியலின மக்களை தொடர்பு படுத்தி பேசி இழிவுபடுத்தியுள்ளார். அவரது உள்ளத்தில் இருக்கும் இந்த செயல்களும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொருந்தும். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சட்டசபைக்குள் அத்துமீறி நுழைந்து அதிமுக சபாநாயகர் தனபாலை தள்ளிவிட்டு, சட்டையை கிழித்து, இருக்கையில் அமர்ந்தவர்கள்தானே திமுகவினர். பஞ்சமி நிலத்தில் முரசொலி கட்டிடத்தை கட்டியது தொடர்பான விசாரணையின் போது, அதன் தாழ்த்தப்பட்டோருக்கான விசாரணை ஆணையத்தின் தலைவர் முருகனையும் அவமதிப்பு செய்தவர்கள்தானே திமுகவினர்.

கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்குமா..? ஆனால், ஸ்டாலின் கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களை கண்டு கொள்வதும் இல்லை, நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது வருத்தமளிக்கிறது.

பட்டியலின மக்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் இனியும் நடக்காமல் இருக்க, ஆர்எஸ் பாரதியின் எம்பி பதவியை பறிக்க வேண்டும். அதேபோல, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும், எனக் கூறினார்.

ஆர்எஸ் பாரதியை கைது செய்து பிறகு ஜாமீனில் விட்டிருந்தாலும், அவர் மீது கடுமையான நடவடிக்கை தேவை என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply