ஆவின் நிறுவனத்தில் முறைகேடு : 34 தலைமை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!!

18 July 2021, 10:21 am
Aavin Milk- Updatenews360
Quick Share

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு காரணமாக அந்நிறுவன 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக ஏற்பட்ட புகார் எழுந்தது. மேலும்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் உயர்பதவியில் அமர்த்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் பால் முகவர்கள் புகார் அளித்தனர்.

இதனால், ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேடுகள் குறித்து விசாரணை அறிக்கை தயார் ஆகி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆவின் முறைகேடு காரணமாக அந்நிறுவனத்தின் 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, சந்தை பிரிவு பொதுமேலாளர் ரமேஷ் குமார் – விழுப்புரம் ஜி.எம் ஆக மாற்றப்பட்டுள்ளார், முன்னதாக விழுப்புரம் ஜி.எம் ஆக இருந்த புகழேந்தி – சந்தை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நிதிப் பிரிவு துணைப் பொது மேலாளர் – முத்துக் குமரன் உள்ளிட்ட 34 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 110

0

0