அரசுப்பேருந்து மோதி விபத்து: தாய் மற்றும் 3 மாத பெண் குழந்தை பலி: கதறித் துடித்த உறவினர்கள்…!!

Author: Sudha
17 August 2024, 10:45 am

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, கானத்தூரை  சேர்ந்தவர்கள் முகாஜித் அகமது மற்றும் பினாசுருபி. இவர்களுக்கு, ஐசித் அகமது என்ற மகனும், 3 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில், சென்னைக்கு சொந்த வேலையாக சென்று விட்டு வீடு திரும்பியபோது பனையூர் அடுத்த உத்தண்டியில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் மனைவி பெனாசுருபி,  3 மாத பெண் குழந்தையான ஆசியா அகமது இருவரையும் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 367

    0

    0