வீடியோ கான்பிரன்ஸ் கூட்டத்தில் திடீர் விபத்து.! உயிர் தப்பிய அமைச்சர் உதயகுமார்!!

1 September 2020, 1:07 pm
Minister Udayakumar - Updatenews360
Quick Share

மதுரை : வருவாய்த்துறை அமைச்சர் பங்கேற்ற வீடியோ கான்பரஸ் கூட்டத்தில் தீடீரென விழுந்த பிளக்ஸ் போர்டால் இரண்டு காயமடைந்தனர்.

மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என அனைத்துறை அதிகாரிகள் பங்கேற்ற வீடியோ கான்பரஸ் கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் தலைமைச்செயலாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வீடியோ கான்பரஸ் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் வினய் ஆகியோர் பின்னால் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு தீடீரென விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தீடீரென பிளக்ஸ் விழுந்ததால் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என அதிகாரிகளை கடிந்துகொண்டனர்.

மேலும் இந்த விபத்தில் அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதே போல செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 10

0

0