வணிகர்களுக்கு அளித்த வாக்குறுதி : கொடைக்கானலில் சாலையோர கடைகளின் ஒரு வருட வாடகையை குறைக்க நடவடிக்கை?

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2021, 2:11 pm
Kodai Shop - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் ஏரிச்சாலை வணிகர்களின் ஒரு வருட வாடகை குறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினர் உறுதியளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை மற்றும் பிற இடங்களில் உள்ள நகராட்சி தரை வாடகை கடைகளுக்கான ஒரு வருட வாடகை குறைப்பு செய்ய கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், திமுக சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி கடை வாடகைகளை கொரோனா கால கட்டத்தில் பூட்டப்பட்டு இருந்ததை முன்னிட்டு ஒரு வருடம் வாடகை விடுதல் செய்ய வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அதனை உடனடியாக செயல்படுத்த அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உள்ளுர் மக்கள் மற்றும் திபெத்தியர்கள் நகர திமுக
செயலாளரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர்களிடம் இந்த கோரிக்கை கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவினர் அவர்களிடம் உறுதியளித்தனர்

Views: - 223

0

0