கோவை தொழில் துறையினரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை : அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2021, 6:47 pm
Minister Thangam Thennarasu - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட தொழில் துறையினரின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்திலுள்ள தொழிலதிபர்கள், தொழில்துறையினருடன் அமைச்சர்கள் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொழிற்துறை, ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது : தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது. 17 ஆயிரம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, கொரோனா காலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஏற்றுமதிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொழில் வளர்ச்சியை உறுதி செய்ய முதல்வர் உத்தரவின் படி அமேசான் நிறுவனத்தின் சார்பில் ஒரு இடம் துவங்கபட்டுள்ளது. புதிய தொழில்கள் உருவாக்க தொழில் வாய்பை உருவாக்க உறுதியளிக்கிறோம்.

கோவையில் இண்டஸ்ரியல் பார்க் தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார். கோவை தொழில்துறையினரின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

சிட்கோவில் மனை பிரிவுகள் பிரிக்கப்படும்போது சிறுகுறு நிறுவனங்களுக்கு என இடஒதுக்கீடு நடவடிக்கை எடுக்கபடும். மோரடோரியம் கால அவகாசம் வழங்க பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக தொழில் முதலீட்டு கழகத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கபடும்.

கோவை விமான நிலைய விரிவாக்கம் 10 வருடங்களாக தொய்வடைந்துள்ளது. நடைபெற உள்ள பட்ஜெட் தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவர உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 305

0

0