சட்டப்படிப்பிற்கான பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி பேச்சு

Author: kavin kumar
28 August 2021, 9:55 pm
pondy cm - rangasamy
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்படிப்பிற்கான பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதி மன்ற நீதிபதிகள், சஞ்சய் கிஷன் கௌல், ராமசுப்ரமணியன், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பானர்ஜி, முதல்வர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.இவ்விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இவ்விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இக்கல்லூரியில் பயின்ற பலர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் சிறந்த நீதியரசர் மற்றும் வழக்கறிஞர்களை இந்த கல்லூரி உருவாக்கியுள்ளது. இதேபோல் தற்போது பயிலும் மாணவர்களும் சிறந்த நிலைக்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு உயர்கல்வி அளிப்பதில் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், புதுச்சேரியில் சட்டபடிப்பிற்கான பல்கலைக்கழகம் வருவதற்கான அதனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக தற்பொது 9 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அதில் 3 பெண் நீதியரசர்கள் இடம்பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது என்றார்.

Views: - 265

0

0