இந்த முறை ஜோடியா… அல்டிமேட் ஸ்டாருடன் இணையும் உலக அழகி : குஷியில் அஜித் ரசிகர்கள்!!

Author: Rajesh
30 August 2022, 1:11 pm
Quick Share

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பெரும் ரசிகர் பட்டாளத்துடன் இருப்பவர் நடிகர் அஜித்.என்னதான், இவருக்கு சமூக வலைதள கணக்குகள் இல்லை என்றாலும், இணையத்தில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி, லைக்ஸை குவித்து விடுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் இவரது நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது.

தற்போது, மீண்டும் எச்.வினோத் – அஜித் கூட்டணியில், ‘AK61’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், செப்டம்பரில் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. ‘AK61’ படத்தைத் தொடர்ந்து அஜித், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ‘AK62’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் படத்தின் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அவரை அணுகி பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை சரிப்பட்டு வந்தால், இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிப்பார் என்றும், இதுவே அஜித்தும் ஐஸ்வர்யாவும் ஜோடியாக நடிக்கும் முதல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் அஜித் -ஐஸ்வர்யா இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யாராய் மற்றும் அஜித் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Views: - 209

1

1