பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை மீரா மிதுன் மற்றும் ஆண் நண்பருக்கு கிடைத்தது ஜாமீன்

Author: Babu Lakshmanan
22 September 2021, 7:21 pm
Meera mithun Boy- Updatenews360
Quick Share

சென்னை : பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 35 நாட்களுக்கு மேலான சிறை வாசம், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட சோர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜாமீன் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Views: - 224

0

0