பழக பழக பிடிக்குதே.. பழைய ரணங்கள் மறக்குதே.. மனைவியை நினைத்து ஏங்குகிறாரா தனுஷ்…?

Author: Rajesh
16 July 2022, 2:58 pm
Quick Share

தமிழ் சினிமாவின் டாப் நடிகராகவும் மிக சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவரின் படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் அவர்கள் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, அனிருத் இசையமைத்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – அனிருத் காம்போ மீண்டும் இணைந்துள்ள படம் இது.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொாடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இப்படம் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகஸ்ட் 18-ம் தேதி தியேட்டர்களில் வெளியவுள்ளது.

இதில் தனுஷ் மூன்று விதமாக நடித்துள்ளார். அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் காதல் உணர்வுகள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானிசங்கர், ராஷி கன்னா என தனுஷிற்கு மூன்று ஜோடிகள் நடித்துள்ளனர்.

இந்த படத்திலிருந்து ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு வரிகளை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மேகம் கருக்குதா என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் நேற்று வெளியிடப்பட்டது. மேகம் கருக்காத என துவங்கும் இந்த பாடலை தனுஷ் எழுதி, அவரே பாடி உள்ளார். தாய் கிழவி பாடலையும் அவரே எழுதி , பாடி இருந்தார். காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த பாடலில் பழக பழக பிடிக்குதே…பழைய ரணங்கள் மறக்குதே என தனுஷ் ஒரு வரி எழுதி உள்ளார். இதற்கு என்ன அர்த்தம், மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த சோகத்தை தான் இந்த பாடல் வரிகளில் தனுஷ் காட்டி உள்ளாரா என ரசிகர்கள் பலர் கேட்டு வருகின்றனர். பாடலின் வீடியோவில் தனுஷ், ராஷி கன்னா மற்றும் நித்யா மேனனுடன் ஆடி பாடுவதை போல் உள்ளது. ஆனால் வரிகளை கேட்டால் சோகத்தை கொட்டுகிறது. ஏன் இந்த குழப்பம் என்றும் ரசிகர்கள் புரியாமல் குழப்பத்துடன் கேட்டு வருகின்றனர்.

இந்த படத்தோட சேர்த்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், டோலிவுட்டில் வாத்தி , ஹாலிவுட் தி கிரே மேன் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகி உள்ளார் தனுஷ். இதில் கிரே மேன் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடைபெற்றது இந்த படத்தில் பிரீமியார் ஷோவில் தனுஷ் தன் மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். தனுஷ் கருப்பு உடையில் அழகாகவும் கேமராக்களுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படத்தை இயக்குனர் ஜோடியான ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோவுடன் இயக்கியுள்ளனர். ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகும் இப்படத்தில் தனுஷ் அவிக் சானாக நடித்துள்ளார் .இந்நிலையில் தற்போது The Gray Man தனுஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் இப்படத்திற்காக தனுஷ் $ 500,000 சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

Views: - 1436

8

0