எனக்கு தேவை அது மட்டும்தா… வேற எதுவும் வேண்டாம் : வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ட்வீட்.!

Author: Rajesh
19 July 2022, 10:55 am
Aishwarya RAjinikanth - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நடிகர் தனுஷின் பெயரை நீக்கினர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இந்த செயல் தனுஷ், ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி, இருவரும் சேர வேண்டும் என விரும்பி திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இருவரும் மீண்டும் இணைவதற்கு சாத்தியமே இல்ல என்றே தெரிகிறது.

இதனிடையே, தனுஷ் சமீபத்தில் தன் பிள்ளைகளுடன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரன்களிடம் ரஜினி அது பற்றி விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் அப்பாவுடன் இருப்பது தான் பிடித்திருக்கிறது கூறியதாகவும், இதனால் அதிர்ந்து போன ரஜினி தன் மனைவியிடம் ஐஸ்வர்யா குறித்து கோபமாக பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்ரகளின் மகன்களான யாத்ரா, லிங்காவை கட்டி அனைத்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சில நேரங்களில்..உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே என பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Views: - 1011

9

1