நடிகர் தனுஷின் மகனா… உருவத்தில் மட்டுமல்ல, குரலும் ஒன்றுதான் : பள்ளியில் உறுதி மொழி எடுத்த யாத்ராவின் வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2022, 1:17 pm
Yatra Dhanush - Updatenews360
Quick Share

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் இரண்டாவது மகன் ஆவார்.

முதல் மகன் செல்வராகவனும் சினிமாவில் முன்னணி இயக்குநர், இரண்டாவது மகன் தனுஷ் முன்னணி நடிகர் என குடும்பமே சினிமாவில் கொடிக்கட்டி பறக்கிறது. துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.

ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

தனுஷ் நடிகர் ரஜினியின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உண்டு. மகன்களும் தனுஷை போல தோற்றம் கொண்டவர். இவர்களின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களே மெய்சிலிர்த்துப் போயுள்ளனர்.

இவர்கள் மகன் யாத்ரா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இந்நிலையில் பள்ளி நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மகன் உறுதிமொழி எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்படியே அப்பாவை போலவே இருக்காரே உருவம் மட்டுமல்ல குரலும் அப்படித்தான் உள்ளது யாத்ரா என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்

Views: - 207

4

2