சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அதில் எல்லோரும் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சிலர்தான் தங்கள்து கடின உழைப்பு, திறமையால் வாகை சூடி வருகின்றனர்.
இந்த நிலையில் முத்துராமனின் மகன் கார்த்திக் நவரச நாயகனாக மக்களால் போற்றப்பட்டார். கார்த்திக்கின் மூத்த மனைவியின் மகனான கவுதம் கார்த்திக் நடிக்க வந்து 10 ஆண்டுகள் நெருங்க உள்ளது. ஆனால் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.
கார்த்திக்கின் நண்பர் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூடம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் கவுதம் கார்த்திக். படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதன் பிறகு தெலங்கு ரீமேக்கான என்னமோ ஏதோ படத்தில் நடித்தார். இளசுகளை கவரும் வகையில் அமைந்த இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை. இருப்பினும் வாய்ப்புகள் வந்தன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய வை ராஜா வை படம் கலவையான விமர்சனம் பெற்றது. தொடர்ந்து தேவராட்டம், ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவகி மற்றும் இந்திரஜித் உட்பட ஐந்து படங்களில் ஒரே நேரத்தில் நடித்தார்.
இதில் தேவராட்டம் நல்ல விமர்சனங்களை பெற்றது. ஹரஹர மகாதேவி ஹிட் கொடுத்தாலும் ஏ சர்டிபிகேட் படம் என்ற விமர்சனம் எழுந்தது. தொடர்ச்சியாக யுத்த சதம், சிப்பை, பத்து தல உட்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. 3 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கிசு கிசு எழுந்தது. தற்போது அது உண்மையாகிவிட்டது.
இரண்டு வருடங்களுக்கு மேல் LIVING TOGETHERல் வாழ்ந்து வரும் இவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் திருமணம் என்ற செய்தி வந்த நிலையில் இதை மறுத்துள்ள மஞ்சிமா, ஏப்ரல் மாதம் கவுதம் பிசியாக உள்தால் திருமண தேதியை பிறகு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தந்தையான கார்த்திக் எப்படியோ மகனும் அந்த வழியே என கோடம்பாக்கம் கிசுகிசுத்து வருகிறது. கார்த்திக் ராகிணி என்ற நடிகையைத்தான் திருமணம் செய்துள்ளார். அதே போல ராகிணியின் தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.