மீண்டும் மீசை முறுக்க போகும் கமல்.. எதிர்க்க தயாராகும் அரசியல் தலைவர்.?

Author: Rajesh
28 February 2022, 2:39 pm

பல வித்தியாசமான கேரக்டரில் நடித்து தொடர்ந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். பல வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை எப்போதுமே ஆச்சிரியப்படுத்தி வருபவர். இவரது நடிப்பில் கிராமத்து சாயலில் இருந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவை.
அந்த வரிசையில் வெளியான தேவர் மகன், விருமாண்டி போன்ற திரைப்படங்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக உள்ளது. முறுக்கு மீசையில், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிராமத்து வசனம் பேசுவதில் வல்லவர்.

அந்த வகையில், தற்போது கமல்ஹாசன் மீண்டும் அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறாராம். இதனிடையே இயக்குனர் முத்தையா கூறிய கதை கமலுக்கு ரொம்பவும் பிடித்துப் போய் விட்டதாகவும், அந்த கதையில் நடிப்பதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஒரு காலக்கட்டத்தில் கமல், புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

சண்டியர் என்ற பெயரில் திரைப்படம் எடுத்தார் கமல். சண்டியர் என்ற பெயர் ஜாதி கலவரத்தை தூண்டிவிடும் என்பதால் சண்டியர் படத்தின் படப்பிடிப்பை தென் மாவட்டங்களில் நடத்தவிட மாட்டேன் என்று கிருஷ்ணசாமி அறிவித்தார். இருப்பினும் சளைக்காத கமல்ஹாசன் படப்பிடிப்பை சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் படத்தினை எடுத்து முடித்தார். இருப்பினும் படம் ரிலீசாகும்போது பெரும் பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் சண்டியருக்கு பதிலாக விருமாண்டி என்று பெயர்சூட்டிவிட்டார் கமல் . ஒரு வழியாக படமும் வெளியாகி விட்டது.

இந்த நிலையில், மீண்டும் அது போன்ற கதைகளில் கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்த மீண்டும் கிருஷ்ணசாமி எதிர்ப்பாரா.? என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

  • Superstar Rajinikanth's Upcoming Medical Trip to America ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
  • Views: - 1612

    1

    0