உடற்பயிற்சியின் போது கீழே விழுந்து எலும்பு முறிவு: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி..!!

Author: Aarthi Sivakumar
29 July 2021, 9:32 am
Quick Share

சென்னை: உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து நடிகர் கார்த்திக் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இன்று விஜய் சேதுபதியின் துடுக்குத்தனமான நடிப்பிற்க்கும், காமெடியான வசனத்திற்கும் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, ஒருகாலத்தில் அதே அளவு ரசிகர்களைக் கொண்ட நடிகர் தான் நவரச நாயகன் கார்த்திக்.

இவரின் துடுக்குத்தனமான நடிப்பும் வெகுளியான சிரிப்பிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் . தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் எல்லா விதமான ரசிகர்களையும் கவர்ந்தார். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். அதன் பிறகு மவுனராகம், மேட்டுகுடி, உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அமரன் கிழக்குவாசல், அக்னி நட்சத்திரம் என்று பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

இந்த நிலையில் திடீரென நேற்று இரவு உடற்பயிற்சி செய்ததில் கீழே விழுந்தது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, தனியார் மருத்துவமனைக்கு அட்மிட் ஆன இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சற்றே சோகத்தில் உள்ளனர்.

Views: - 418

1

0