கோவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் மாநில உரிமையை மீட்டு நாட்டை காப்பாற்ற முடியும் என்று நடிகர் கருணாஸ் பிரச்சாரம் செய்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராமநாதபுரத்தில் நடிகர் கருணாஸ் பேசும்போது கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளில் மக்களிடம் இருந்து வருமான வரியை வசூல் செய்யும் பா.ஜனதா அரசு சென்னை, தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி தர மறுக்கிறது.
குஜராத், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
மேலும் படிக்க: விஷாலை அரசியலில் இயக்கப் போவது யார்…? விஜய் கட்சியை பலவீனப்படுத்த அவதாரம்!
ஆனால் தமிழகத்திற்கு 29 பைசா என்ற அளவில்தான் நிதி வழங்குகிறார்கள். தாய் மொழி தமிழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். கோவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் மாநில உரிமையை மீட்டு நாட்டை காப்பாற்ற முடியும். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும்.
அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் தான் வாக்கு சேகரிக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி மண்ணுக்கும், சமூகத்துக்கும் துரோகம் செய்தவர். சசிகலா தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற கோவை ஜி.எஸ்.டி. வரியால் தொழில் நலிவடைந்து உள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். வருங்கால சந்ததிகளை காப்பாற்ற பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும், எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.