ரஜினிகாந்த்..! கர்ப்பம்…! கட்சி.. ! சுற்றி வளைத்து முக்கோணமாக பேசிய நடிகை கஸ்தூரி..!

15 December 2019, 8:01 pm
Quick Share

சென்னை: ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும், அதற்கு முன்னரே யாருடன் அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்று கூற முடியாது என்று நடிகை கஸ்தூரி கூறி இருக்கிறார்.

சென்னை கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கஸ்தூரி கூறியதாவது:

பாலியல் பலாத்கார படுகொலைகள் குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்தில் எந்த தவறும் இல்லை. மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதை தான் அவர் பேசியிருக்கிறார். பிரிவினைவாதம் என்ற ஒன்றை பற்றி பேசுவதற்கு நாட்டில் ஒரு கூட்டம் இருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஒரு காமெடி கலாட்டா ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது, யாரிடம் கூட்டணி என்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கஸ்தூரி நேரிடையாக பதில் சொல்லவில்லை. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே  குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது. அது போன்று தான் ரஜினிகாந்த் முதலில் கட்சியை தொடங்கட்டும்.

அதன் பிறகு தான் அவரது அரசியல் மூவ் எப்படி என்று தெரியும். அதனை தொடர்ந்தே  அவர் யாருடன் கூட்டணி வைப்பாரா, இல்லையா என்பது பற்றி கூற முடியும் என்றார்.