சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பை வழங்கி வருகிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா-வும், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்திலும் நடித்தார். இதைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படத்தில் தங்கை செண்டிமென்ட் காட்சியில் நடித்து ரசிகர்கள் மனதை கலங்க வைத்தார்.
தற்போது மீண்டும் இளம் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பை அள்ளிக் கொடுத்து வரும் ரஜினிகாந்த், அடுத்தடுத்து இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் சுபாஸ்கரனுடன் இரண்டு படங்களில் நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும்’லால் சலாம்’. அடுத்து ‘தலைவர் 171’ என்று அழைக்கப்படும் படம். இந்த படத்தை பி வாசு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன் தயாரிப்பு பிரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இப்படத்தை பி வாசு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே, லாரன்ஸை வைத்து எடுக்கப்பட்டு வரும் சந்திரமுகி 2 படத்திற்கு சற்று பிரேக் கொடுக்க இருக்கிறாராம்.
இயக்குநர் வாசு இதற்கு முன்பு ரஜினிகாந்துடன் ‘பணக்காரன்’, ‘மன்னன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.