‘ஆன்மீக பெரியாரின் ஆட்சி மலரட்டும்‘ : மதுரையில் மீண்டும் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்!!

13 September 2020, 6:57 pm
Quick Share

மதுரை : ஆன்மீக பெரியாரின் ஆட்சி மலரட்டும் என ரஜினி ரசிகர்கள் மதுரையில் மீண்டும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகே, நான் அரசியலுக்கு வருவேன் எனவும், மேலும் அரசியல் மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என அவர் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குவார், தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். 

இந்நிலையில் பாஜகவிற்கு ரஜினி ஆதரவளிப்பார் எனவும், ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் எனவும் பாஜகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில் ரஜினியை அரசியலில் மையப்படுத்தும் விதமாக நல்லவர் பின்னாலே நாடே வரும் தன்னாலே எனவும், எம்.ஜி.ஆர் போல இல்லையென்றாலும், எம்.ஜி.ஆரின் ஆட்சியை தருவேன் எனவும் மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.  ஆனால் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டி ரஜினி ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மதுரையில் ரஜினி ரசிகர்கள் கடவுள் நிந்தனை ஒழியட்டும், ஆன்மீக ஆட்சி மலரட்டும் எனவும், ஆன்மீக பெரியாரின் ஆட்சி மலரட்டும் எனவும், அரசியல் மாற்றம் இப்ப இல்லைனா எப்பவும் இல்ல என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 0

0

0