நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று

17 September 2020, 10:09 pm
Quick Share

சென்னை: கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என்று பல கட்சியை சேர்ந்த தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜன் இன்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் ராமராஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0