தமிழகம்

அரசியல் வியாபாரமாகிவிட்டது… சாதி, மதத்தை விற்று பொழப்பு நடத்துறாங்க : நடிகர் ரஞ்சித் காரசார கருத்து!

திண்டுக்கல், சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு மலைக்கோட்டை சுற்றி கிரிவல நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் முளைப்பாரி எடுத்து கிரிவலம் சென்றனர். இந்த நிகழ்வில் நடிகர் மற்றும் இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டார்.

பின் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “சித்திரை பௌர்ணமி அன்று வழக்கமாக கிரிவலம் சென்று வருகிறேன். அனைத்து பகுதிகளுக்கும் சென்று உள்ளேன். தமிழ்நாடு ஆன்மீக பூமி மிகச் சிறப்பான இந்த மண்ணில் கால் வைப்பது பாக்கியமாக கருதுகிறேன்.

இதையும் படியுங்க: ஊழலில் 9 அமைச்சர்கள்.. ஒருத்தருக்கு ஒருமாசம் என்றாலும்… முதலமைச்சரை கடுமையாக சாடிய தமிழிசை!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான அபிராமி அம்மன் கோயிலில் பலர் வேண்டுதல் வைத்து நிறைவேறியுள்ளது. அதேபோல் நானும் வேண்டுதல் வைத்து இங்கு வந்துள்ளேன். தற்போது, மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் செல்ல உள்ளோம் பலர் முளைப்பாரி எடுத்து வருவதையும் இங்கு காண முடிகிறது. இங்கு கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.

சிறுபான்மையினரை பாதுகாக்கும் ஒரே அரசாக திமுக திராவிட மாடல் அரசு தான் உள்ளது என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, அரசியல் என்பது பொழப்பு. இன்று அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது. சாதி மதத்தை விற்று பிழைப்பது என்று இருக்கிறது.

ஆனால் இங்கு இருக்கும் மக்களுக்கு சாதி, மதம் கிடையாது. இங்கே மனசார வந்து வேண்டுவது கடவுளை மட்டும்தான். சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ இறைவனுக்கு இந்த நாடகம் தெரியாது. எனக்கு இதை பற்றி கருத்து சொல்வதற்கு பெரிதாக தெரியாது.

2026 தேர்தல் திமுக-விற்கும் தவெக-விற்கும் என விஜய் கூறுவது குறித்த கேள்விக்கு, அனைவரும் கட்சி ஆரம்பிக்கலாம் மக்களுக்கு நல்லது செய்வது என்றால் மனசார வரவேற்கிறேன். எல்லோரும் நல்லது செய்வதற்காகவே அரசியல் குள்ளே வருகிறார்கள்.

மக்கள் நல்லது அனுபவித்து உள்ளனரா? கல்வி மருத்துவம் இட ஒதுக்கீடு குறிப்பாக விவசாயத்தில் ஏற்றம் குறைவு என பின்னடைவு இருந்து கொண்டே தான் உள்ளது. பொருளாதாரத்தில் நாம் இன்னும் நிறைய முன்னேற வேண்டியுள்ளது.

விஜய் அவர்கள் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது நோக்கம் தெரியவில்லை. அதனால், கருத்து சொல்ல எனக்கு தெரியவில்லை.

திண்டுக்கல் மையப்பகுதியில் உள்ள அபிராமி அம்மன் சிலையை மலைக்கோட்டை மேலே வைக்க வேண்டும் என்ற திண்டுக்கல் மக்களின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, ஆயிரம் ஆண்டுகள் மேலே இருந்த அபிராமி அம்மன் 250 ஆண்டுகளாக கீழே இருப்பதாக தெரிவிக்கின்றனர். இருந்தாலும் எல்லா மக்களின் கோரிக்கை.

இங்கு எந்த சாதி மத பிரச்சனையும் கிடையாது. கடவுளின் பூர்வீகம் எங்கு உள்ளது அங்கு செல்ல வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கட்டாயம் நானும் வேண்டுகிறேன் கூடிய விரைவில் அரசாங்கமும் மக்களும் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வைகைச் செல்வன் கூறியது குறித்த கேள்விக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் நடுவில் அரசாங்கம் நம்மளை பாதுகாத்து வருகிறது. இதுபோன்ற அரசியல் பேச்சுகளை கேட்கும் பொழுது சிரிப்பு வருகிறது. அவர் கூறியது குறித்த எனக்கு சரியாக தெரியவில்லை” என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை…

1 hour ago

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் : பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் கருத்து!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

2 hours ago

சாகும் வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி அதிரடி!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு…

2 hours ago

ரவி மோகனுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக்கூடாது.. பாடகி கெனிஷா உருக்கம்!

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். பின்னர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார்.…

4 hours ago

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு… சாகும் வரை சிறையா?

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு…

4 hours ago

This website uses cookies.