தளபதி 66 படம் இப்படிதான் இருக்கப்போகுது: சரத்குமார் சொன்ன சூப்பர் Update…ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு..!!

Author: Rajesh
2 May 2022, 10:04 pm
Quick Share

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

இந்நிலையில் விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த மாதம் துவங்கியது. தளபதி 66 படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசைமைக்கவுள்ளார். பொதுவான விஜய் படங்களிலிருந்து இப்படம் சற்று மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என்பதே இப்படக்குழு தரும் தகவலாக உள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் சரத்குமார் தளபதி 66 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த படத்தின் பூஜையில் கூட இவர் கலந்து கொண்டார். அதன் மூலம் தான் ரசிகர்களுக்கு இவர் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தற்போது சரத்குமார் தளபதி 66 படத்தைப் பற்றி முதன்முதலில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்று முடிக்கப்படும். மேலும் இப்படத்தின் கதைக்கரு மிகவும் அழுத்தமானதாகவும், அதே சயமத்தில் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்த படமாகவும் இருக்கும் என்றார் சரத்குமார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முடிந்துவிடும் என்று சரத்குமார் கூறியுள்ளதால் அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாளன்று இப்படத்தின் டீசரோ அல்லது முதல் பார்வையோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இப்படத்தில் எமோஷ்னல் காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்றும், சண்டை காட்சிகள் இல்லை என்றும் ஒரு தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 494

0

0