நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடைபெற வேண்டி பிரார்த்தனை : முருகன் கோவிலில் முட்டிப் போட்டு ரசிகர்கள் வழிபாடு!!

Author: Udayachandran
4 October 2020, 2:57 pm
Simbu - Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி அகில இந்திய எஸ்டிஆர் நற்பணி இயக்கம் சார்பில் முட்டி போட்டு படியேறி ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி அகில இந்திய எஸ்.டி.ஆர் நற்பணி இயக்கம் சார்பில் மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவர் திரு மதன் தலைமையில் கையில் சிம்புவின் படத்தை வைத்துக்கொண்டு முட்டி போட்டு படியேறி ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியும் கோயில் வாயிலில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கியும் தங்களது வேண்டுதல்களை செலுத்தினார்கள்.

நாடு முழுவதும் மக்கள் கொரானா பெருந்தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இளைஞர்கள் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி பிரார்த்தனை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 50

0

0