“திடீர்னு அழுகையா வருது, என்னனு தெரில…”: புலம்பி அழுத சிம்புவின் வைரல் வீடியோ!!

Author: Rajesh
4 February 2022, 10:01 am
Quick Share

தமிழ் சினிமால எந்தவொரு நடிகனுக்கும் கிடைக்காத வாய்ப்புகள், யாருக்கும் இல்லாத அளவுக்கு technical knowledgeனு சிம்புக்குள்ள அவ்வளவு திறமை இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும்.

ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ சிம்பு மட்டுமே.

2021- ல் வருடம் உடம்பை குறைத்ததிலிருந்து சிம்பு படு ஸ்பீடாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். கடந்த 2021-ஆம் வருடம் யாருக்கு நல்லபடியாக அமைந்ததோ இல்லையோ சிம்புவிற்கும் சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஒருபக்கம் ஈஸ்வரன் தோல்வியடைந்தாலும் மாநாடு படம் மாபெரும் வெற்றி.

மேலும் சிம்பு நடிக்கும் அடுத்தடுத்த படங்களை பற்றி அப்டேட்களை வாரி குவிக்கும் சிம்புவை பார்க்கும் மற்ற ரசிகர்களுக்கு பொறாமையாகவே உள்ளது. மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ‘ பத்து தல ‘ படம்னு அதகளம் செய்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிலம்பரசன், அடிக்கடி தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் அவர் 105 கிலோவில் இருந்து 72 கிலோவுக்கு எப்படி வந்தார் என்பதை குறித்து Video ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.

Views: - 751

5

2