புதுச்சேரி முதலமைச்சருடன் நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு : வெளியான சூப்பர் தகவல்.. ஆச்சரியத்தில் தமிழ் சினிமா!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 8:37 pm

புதுச்சேரி : உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தி வலியுறுத்தினார்.

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்கள் பட பிடிப்புகள் நடப்பது வழக்கம்.

இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரியில் நடைபெறும் படபிடிப்பிற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் நகராட்சி சார்பில் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உயர்த்தப்பட்ட வரியை குறைக்ககோரி முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் மாவட்ட ஆட்சியர் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 1479

    0

    0