நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு..!

28 September 2020, 6:18 pm
Quick Share

சென்னை : நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக நீட் தேர்வு, வேளாண் மசோதா உள்ளிட்டவற்றிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், தனது தயாரிப்புகளில் உருவாகும் மற்றும் நடிப்பில் உருவாகும் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகிறார் சூர்யா. இதனால், பல்வேறு எதிர்ப்புகளை அவர் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சென்னையின் காவல்கட்டுப்பட்டு அறைக்கு வந்த அழைப்பில், சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மோப்ப நாயுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சூர்யாவின் அலுவலகத்தில் சோதனையில் ஈடுப்பட்டனர். அதில்,வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

Views: - 8

0

0