நடிகர் விஜய்யுடன் நடிக்காததற்கு இதுதான் காரணம்.. விரைவில் முக்கிய அறிவிப்பு வெளிவரும்… நடிகர் விஷால் சொன்ன ரகசியம்..!!

Author: Babu Lakshmanan
13 December 2022, 7:26 pm
Quick Share

திருச்சி ; விஜய் படத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் நடிக்கும் லத்திசார்ஜ் வருகிற 22ஆம் தேதி திரையில் வெளிவர உள்ளது. படத்தின் பிரமோஷன்காக இன்று திருச்சி எல்.ஏ சினிமா திரையரங்கில் நடிகர் விஷால் மற்றும் படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் விஷால் பேசியதாவது :- திருச்சியில் கல்லூரி பயின்றேன். நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் விளையாடி உள்ளேன் . மாணவராக வந்தேன்,
நடிகனாக வந்தேன், பொதுச் செயலாளராக வந்தேன். ஏன் நேரில் திருச்சி வந்தேன் என்றால், நேரில் வந்து செல்ல ஆசைப்பட்டேன்.

கல்விக்காக கஷ்டப்படும் பெண் குழந்தைக்கு கல்வி கொடுத்து வருகிறேன். திருச்சி அகதி முகாமில் 1 1/2 மணிநேரம் அவர்களுடன் நேரத்தை செலவிட்டேன். பின்னர் காவல் துறையினர் அனுமதி இல்லை என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார்கள். அங்கு திரைப்படம் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் தற்பொழுது இந்த படத்தையாவது திரையிட அனுமதி பெற முயற்சிப்பேன்.

இந்த படத்தில் சண்டை பயிற்சியாளர் பீட்டர்ஹயினுடன் இணைந்து பல காயம் பட்டாலும் நடித்தேன். காயம்பட்டு கேரளா சென்று சிகிச்சை பெற்ற பின் படபிடிப்பை முடித்தேன். பொக்கை, சால்வை வேஸ்ட் அந்த பணம் இருந்தால் 2 பெண் குழந்தை படிப்புக்கு பயன்படும். திருட்டு விசிடி கேள்விபட்டால் முன் நிற்பேன்.

இப்போது என் கையில் லத்தி இருக்கு. படம் திருப்தியாக இருக்கு என செல்வது தான் முக்கியம். இந்த இடம் உங்களுக்கு திரையரங்கம். எனக்கு கோவில். சமுதாயத்திற்கு நீங்கள் கொடுக்கும் காசை வைத்து தான் சமூதாயத்திற்கு செய்ய வேண்டும். அதை நண்பர்கள் மூலம் செய்து வருகிறேன்.

இங்கு எவ்வளவு பேர் படம் பார்கிறீர்கள். அதில் 1 ரூபாய் விவசாயத்திற்கு வழங்கி வருகிறேன், என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால் பேசியதாவது ;- என் நண்பர் உதயநிதி அமைச்சராவது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. லத்தி படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருந்தால், அதில் வித்தியாசம் தெரிந்திருக்காது. தற்போது கான்ஸ்டபிளாக நடித்திருப்பது தான் இந்த படத்தின் வித்தியாசம்.

இந்த படத்தில் கடைசி 45 நிமிடங்கள் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு இருக்கும். ஓ.டி.டி 20 முதல் 25 சதவீதம் சினிமா பார்க்கும் மக்களை எடுத்து சென்று விட்டது. இருந்தபோதும் நல்ல கதை அம்சம் இருக்கும் திரைப்படங்களை மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். ஓ.டி.டியால் பார்வையாளர்கள் குறையவில்லை பிரிந்து தான் இருக்கிறார்கள்.

விஜய் படத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் பல படங்கள் இருப்பதால் என்னால் நடிக்க முடியாது. நடிகர் சங்க கட்டிடம் ஏற்கனவே கட்டி முடித்திருப்போம். ஆனால், தேர்தலை நிறுத்தி மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் தான், அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதை கட்டுவோம்.

விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. நேரமும், காலமும் வரும் போது நல்ல கதையாக விஜய்யிடம் கூறுவேன். தொடர்ச்சியாக படம் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அரசியலுக்கு வருவது தொடர்பாக அதற்குரிய காலம் வந்தால் தான் பதில் கூற முடியும்.

என் நண்பர்களான ராஜா, மகேஷ் ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் உதயநிதியும் இணைந்துள்ளார். அது எனக்கு பெருமையாக உள்ளது. நடிகர் சங்கத்தின் கோரிக்கைகளை உரிமையுடன் அவர்களிடம் கேட்பேன். துப்பறிவாளன் 2 படம் அடுத்தாண்டு வெளியிடப்படும். மிஷ்கினுடன் இணைய நான் தயாரில்லை, என்றார்.

Views: - 530

0

0