எஸ்.பி.பி-க்கு இசையால் பிரார்த்தனை செய்த ஜனங்களின் கலைஞன்!!
22 August 2020, 6:39 pmநடிகர் விவேக் தனது நகைச்சுவையால் பல ரசிகர்களுக்கு சொந்தமானவர். தனது கருத்துள்ள நல்ல நகைச்சுவையால் ஜனங்களில் கலைஞன் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். இவர் சமூக அக்கறையில் அதிகம் கவனம செலுத்துபவர்.
விழிப்புணர்வு வீடியோக்களும் அதிகளவு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறிக்கொண்டே வருகின்றார். இந்த நிலையல் பின்னணி பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமைடைய வேண்டி சினிமா பிரபலங்கள் இசையால் கூட்டுப் பிரார்த்தனை நடத்த வேண்டும் என பாரதிராஜா அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து நேற்றைய முன்தினம் தனது வீட்டில் இருந்தாவாறே இசைப்பிரார்த்தனையில் ஈடுபட்ட நடிகர் விவேக், கேளடி கண்மணி படத்தில் மூச்சு விடாமல் பாட்டு பாடிய எஸ்பிபியின் “மண்ணில் இந்த காதலின்றி“ பாடலை கீ போர்டு மூலமாக இசையமைத்தார். அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என டிவிட் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.